ஆயிரத்தில் ஒருவன் பற்றி நிறைய விமர்சனகள் வந்துவிட்டது .ஆனால் இந்த இடுகை விமர்சனம் அல்ல .என் ஆதங்கம் . இப்படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை பற்றிய இடுகை அல்ல இது . இப்படம் எவ்வளவு மலிவான வரலாற்று திரிபு என்பதை பற்றிய இடுகை இது .
இப்படம் பற்றி கலவையான விமர்சனகள் வந்திருந்தாலும் , படம் எப்படி இருக்கிறது என பார்க்கச் சென்றேன் .ஆனால் கோபத்தில் ரத்த கொதிப்பு வந்தது தான் மிச்சம் . சோழ மன்னர்களை எவ்வளவு கேவலப் படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி இருக்கிறார்கள் . படம் ஆரம்பிப்பதற்கு முன் , இந்த படத்தின் கதை சோழர் பாண்டியர் வரலாற்றோடு தொடர்ப்பு இல்லை என போட்டுவிட்டால் , எப்படி வேண்டுமானாலும் அந்த தமிழ் மாமன்னர்களை கேவலப்படுத்தலாமா ? கற்பனை கதை என்றால் பிறகு ஏன் சோழர்களின் பெயரையும் , புலிச் சின்னத்தையும் பயன் படுத்தினீர்கள் ? சோழ மன்னர்களை வழிபறிக் கொள்ளையர் போலவும் , சோழத் தேச மக்களை பஞ்ச பரதேசிகளாகவும் , காட்டுமிராண்டிகளாகவும் சித்தரித்துள்ளர்கள் . கி.மு 1000 லேயே நாகரிக வாழ்கை மேற்கொண்டு , கடல் வாணிபம் செய்தவர்கள் தமிழர்கள் . அப்படிப்பட்ட உயர்வுடைய இனத்தின் மன்னர்களை இப்படியா சித்தரிப்பது ?
தஞ்சை பெரியகோவில் , ஆயிரம் ஆண்டுகள் தாண்டி நிற்கும் ஒரு கலை அற்புதம் . அது வெறும் சமயச் சின்னம் மட்டுமல்ல , ஒரு பண்பட்ட இனக்குழுவின் , நாகரிக, கலாச்சார வாழ்வின் அடையாளம் . ராஜா ராஜா சோழரின் ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி . அப்படிப்பட்ட மாமன்னரின் வழிவந்தவர்களை அவரை விட நாகரிகத்தின் உச்சம் தொட்டவர்காளகத்தனேக் காட்ட வேண்டும் .அதை விடுத்து , அவர்களை காட்டுமிராண்டிகளாக காட்டியிருப்பது நியாமா ? பொன்னியின் செல்வன் கூட கற்பனை கலந்த வரலாற்று புதினம்தான் , ஆனால் அதில் தமிழ் மன்னர்களை கேவலப்படுத்தவில்லையே . மாறாக கல்கி , அவர்களை உயர்த்திதானே காட்டி இருந்தார் . தஞ்சை பெரியக் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் இப்படி ஒரு படம் வந்திருக்க வேண்டாம் .
சோழ மன்னர்களை மட்டும் அல்ல பாண்டிய மன்னர்க் குலத்தில் வந்தவர்களையும் ஈவு இரக்கம் அற்றவர்களாக காட்டி இருக்கின்றனர் . உண்மையில் தமிழ் மன்னர்கள் இரக்கமும் ,கனிவும், பெருந்தன்மையும் கொண்டவர்கள் .
இதை விட கொடுமை இந்த படத்தை தமிழர்கள் சகித்துக் கொண்டு இருப்பது . தமிழ்க் கலாச்சாரக் காவலர்கள் எங்கே போனார்கள் ? முன்றரை ஆண்டுகளாக கஷ்டப்பட்டு , 35 கோடி செலவில் எடுக்க பட்டதால் , இந்த வரலாற்று திரிபை சகித்துக் கொள்ள முடியாது .உண்மையில் இக்கதையை செல்வராகவன் யோசித்து எடுக்கவில்லை . டைம் லைன் என்கிற ஆங்கில படத்தின் தழுவல் தான் . தமிழுக்காக அரும்பாடுபடும் தமிழக முதல்வர் இப்படத்தை தடை செய்ய வேண்டும்.

I cant accept ur view regarding ayirathil oruvan.it is a cinema and only acopy of the english movie. but as atamilian we cant tolerate destroyig the name our chola kings &im not support it .take it as a movie.it shows the imagination power of the director.
பதிலளிநீக்குya, it is cinema but visual media has great influence upon our minds. if we thought about kattapomman, its sivaji ganesan who comes before our mind. likewise this flim degraded images of cholas in people's mind. that's why , i can't take it lightly.
பதிலளிநீக்கு