Powered By Blogger

26 ஜூன், 2011

தனிமை ஒரு தவம்

இன்றைய அவசர யுகத்தில் தனிமை என்பது அரிதாக போய்விட்டது. தனிமை என்பது தனித்திருப்பது மட்டும்மல்ல விழித்திருப்பது.         தனித்திருக்கும் பொது தான் பல சிந்தனைகள் கிளர்ந்து எழுகின்றன....... இப்போதெல்லாம் தனிமையில் இருக்கும் பொழுது என் மனதில் எழும் கேள்வி இதுதான் : எதற்காக இந்த வாழ்க்கை?  இந்த வாழ்க்கையின் நோக்கம் என்ன ? பணம் சம்பாதித்து , திருமணம் செய்து , பிள்ளை பெற்று, அதை வளர்த்து , பிறகு ஒரு நாள் மரணம் நம் வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைக்கும்.  இதற்க்காகத்தான் நான் பிறந்தேனா? தனிமையில் என் மனம் சுதந்திரத்தை விரும்புகிறது , இயற்க்கை எந்த பூமியில் புதைத்து வைத்திருக்கும் அதிசயங்களை எல்லாம் அனுபவிக்க விரும்புக்கிறது . காற்றை போல் கட்டுப்பாடின்றி , பறக்க தோன்றுகிறது ...பாசம் பந்தம் ஆசை என்ற மாய கயிறுகள் அவிழ  அவிழ ......... இணையற்ற             பேரானாந்தம் முகிழ தொடக்குகிறது .....   

4 பிப்., 2011

தளிச்சேரிப் பெண்கள்




தளிச்சேரிப் பெண்கள்

 பணிநிலையும் பட்டமும்

• பணிநிலை

இவர்கள் நக்கன், மாணிக்கம், மாணிக்கி, சதுரி, தளியிலார்,

பதியிலார், தேவரடியார், இஷபத் தளியிலார், கூத்திகள்,

கணிகையார், அடிகள்மார் என்று பல்வேறு கோயில்களில்

பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டார்கள். இவர்கள் நிலையான

பணியில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்குப் பின் இவர்கள்

வாரிசுதாரர்கள் பணி செய்யலாம். வாரிசுதாரர் கலைவல்லார்

இல்லாவிடில் கலைவல்ல பிறரை நியமித்து, இவர்கள்

உரிய சம்பளம் - நெல் பெறலாம். வாரிசுதாரர் இன்றி யாராவது

இறந்தாலோ அல்லது பணிபுரிந்த கலைவல்லவராய் வேறு ஊர்

போய்விட்டாலோ அக்கோயில் ஆளும் குழுவினரே தக்கவர்களை

நியமிக்கலாம் என்று பொறிக்கப்பட்டுள்ளது.

தலைக்கோல் பட்டம்

இவர்களில் பெண்கள் சிலர் நல்ல நாட்டியப் பயிற்சி பெற்று

அரசு அவையில் அல்லது கோயிலில் அரங்கேற்றம் என்னும்

தலையரங்கு ஏறித் ‘தலைக்கோல்’ பட்டம் பெற்றனர். அவர்கள்

‘தலைக்கோலி’ என்று அழைக்கப்பட்டனர்.

(திருவிடை மருதூர்க் கல்வெட்டு - முதல் பராந்தகன் காலம்)

‘ஆரூர் தேவனார் மகள் நக்கன் பிரமதேவியாகிய

மும்முடிசோழத் தலைக்கோலி’

‘உறவாக்கின தலைக்கோலி’

‘புங்கத்துறை வல்லவத் தலைக்கோலி’

‘பதியிலார் தியாகவிநோதத் தலைக்கோலி’

(திருவாரூர்க்கோயில் கல்வெட்டுகள்)

என்பன சில தலைக்கோல் பட்டம் பெற்ற கலைவல்ல மகளிர்

ஆவர்.









30 ஜன., 2011

பொன்னியின் செல்வன் உயிரோவியங்கள்

பொன்னியின் செல்வன் காலத்தால் அழியாத கல்கியின் எழுத்தோவியம் அவ்வெழுத்து ஓவியத்திற்கு மணியம் அவர்கள் புனைத்த உயிரோவியங்களில் சில  கீழே உரையாடுகின்றன!


குந்தவையும் வானதியும்



   

வந்தியத்தேவன்

அருள்மொழியும் பூங்குழலியும்





ஆதித்த கரிகாலன்






  பூங்குழலி


ஆழ்வார்க்கடியான்


பொன்னியின் செல்வனை ஊமை  ராணி காப்பாற்றும் காட்சி  


குந்தவை

குந்தவையும் நந்தினியும்


மந்தாகினி

அருள்மொழிவர்மருக்கு ஈழ சிங்காதனத்தை அளிக்கும் காட்சி



பொன்னியின்செல்வன் கதை மாந்தருடன் கல்கி

29 ஜன., 2011

என்னை மயக்கிய பாடல்

உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்


உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்

நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ

உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்

நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ

நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்

உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்

உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்



நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய்

கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்

நான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய்

முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்

என் உலகம் தனிமை காடு

நீ வந்தாய் பூக்கள் நூறு

உனை தொடரும் பறவைகள் நூறு

பெண்ணே பெண்ணே

நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ

நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்



உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்

உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்





உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்

உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்

உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்

என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்

உன் காதல் ஒன்றை தவிர

என் கையில் ஒன்றும் இல்லை

அதில் தாண்டி ஒன்றும் இல்லை

பெண்ணே பெண்ணே

நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ

நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்



உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்

உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்

நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ

உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்

நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ

நெருப்போடு வெந்தே மண்ணாவேன்!

 

27 ஜன., 2011

பட்டுக்கோட்டை இசபெல் பெண்கள் மேன்நிலை பள்ளி முன்னாள் மாணவியர் சங்க தொடக்க விழா
பட்டுக்கோட்டை இசபெல் பெண்கள் மேன்நிலை பள்ளி முன்னாள் மாணவியர் சங்க தொடக்க விழா, கடந்த போகி அன்று , பள்ளி வாளகத்தில் நடந்தது. அப்பள்ளியின் முன்னாள் மாணவி என்ற முறையில் நானும் அவ்விழாவில் கலந்து கொண்டேன். மீண்டும் சின்ன குழந்தை ஆகி விட்ட உணர்வு. மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது . இசபெல் பள்ளியின் முன்னாள் மாணவியர் கலந்துரையாடல் ஆண்டு தோறும்  நடக்க இருக்கிறது .  இசபெல் பள்ளியின் முன்னாள் மாணவியர் அனைவரும் ஆண்டுதோறும் நடக்கும் கலந்துரையாடலில் பங்கு கொள்ள வேண்டும் என்பதே என் அவா


MY VOICE

MY VOICE
இராஜராஜ சோழனும் ஆட்சி அமைப்பும்




தென்னிந்திய வரலாற்றிலேயே மிக உயர்ந்த இடம் பெற்றிருந்த ஆட்சி சோழப் பேரரசின் ஆட்சிதான். அதுவும் முதலாம் இராஜராஜன் காலத்திலும், முதலாம் இராஜேந்திர சோழன் காலத்திலும் தென்னிந்தியாவில் மட்டுமின்றி வட இந்தியாவிலும், இலங்கையிலும், பர்மாவிலும், கடாரத்திலும்(Malaysia) மற்றும் பல தெற்காசிய நாடுகளிலும் புகழ்பெற்றிருந்ததோடல்லாமல் அந்த பகுதியை எல்லாம் தன் ஆட்சி குடைக்குள் வைத்திருந்தார்கள்.

இராஜராஜ சோழனின் அருமை பெருமைகளை கல்கியின் பொன்னியின் செல்வனில் காணலாம். இராஜராஜ சோழனின் ஆட்சியில் தனது ஆதிக்கத்தின் எல்லையை வடநாட்டிலும், கடல் கடந்தும் விரிவுபடுத்தியதோடல்லாமல் ஆட்சி முறைகளையும், பல்வேறு சட்ட திட்டங்களையும், வரிகளையும் உருவாக்கியும் முறைப்படுத்தியும் இருக்கிறார். இவர் காலத்திலும் முதலாம் இராஜேந்திரன் காலத்திலும் கப்பற்படையும் அயல் நாட்டு வாணிகமும் சிறந்து விளங்கியது. திருக்கோவில்களின் எண்ணிக்கை பல்கிபெருகியது, தட்சின மேரு, இராஜராஜீச்சுவரம் என்றழைக்கப்படும் தஞ்சை பெரிய கோவில் முதல் பலநூற்றுகணக்கான கோவில்கள் கட்டப்பட்டன பல கோவில்கள் புதுப்பொலிவு பெற்றன, இந்த கோவில்களுக்கெல்லாம் ஏராளமான நிலங்களும் பொருட்களும் மானியமாக வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்கப்பட்ட சொத்துக்களின் விபரங்கள் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பதியப்பட்டிருக்கிறது.

மேலும் மற்ற சேர, பாண்டியர்களை விட அதிகமாக வரலாற்று ஆவணங்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்கள் சோழர்கள் தான், அவர்கள் ஆட்சி புரிந்த இடமெல்லாம் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் மற்றும் பல ஆவணங்களும் கிடைத்தவண்ணம் உள்ளதே இதற்கு சான்று. இந்த வரலாற்று சின்னங்களில் ஒரு சில தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் உள்ளது, இந்த அருங்காட்சியகம் (Museum) தஞ்சாவூர் - திருச்சிராப்பள்ளி சாலையில் உள்ள மணிமண்டபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரையில் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் கண்டறிந்த சோழர்களின் ஆட்சி பற்றிய தகவல்களையும் பொன்னியின் செல்வனான இராஜராஜன் பற்றிய தகவல்கள் சிலவற்றையும் காணலாம் வாருங்கள்:

இராஜராஜனின் பெயர்கள்: இராஜராஜ சோழன் என்று உலகறிந்த பட்டப்பெயரைக் கொண்டு ஆட்சி செய்த மன்னனுக்கு இருந்த பட்டப் பெயர்கள் மொத்தம் 32, இதோ அந்தப் பெயர்கள்.

1. அருண்மொழி

2. அரிதுர்க்கலங்கன்

3. இரணமுகபீமன்

4. இரவி வம்ச சிகாமணி

5. இராச சர்வஞ்ஞன்

6. இராச கண்டியன்

7. சத்ரு புசங்கன்

8. சிங்களாந்தகன்

9. சோழ மார்த்தாண்டன்

10. சோழேந்திர சிம்மன்

11. தெலிங்ககுலகாலன்

12. நித்ய விநோதன்

13. பாண்டிய குலாசனி

14. மும்முடிச்சோசன்

15. சனநாதன்

16. சத்திரிய சிகாமணி

17. அபய குலசேகரன்

18. இரவிகுல மாணிக்கன்

19. இராசராசன்

20. இராசராயன்

21. இராச மார்த்தாண்டன்

22. இராச விநோதன்

23. கேரளாந்தகன்

24. சண்ட பராக்ரமன்

25. சிவபாத சேகரன்

26. சோழகுல சுந்தரன்

27. திருமுறை கண்ட சோழன்

28. நிகரிலி சோழன்

29. பண்டித சோழன்

30. பெரிய பெருமாள்

31. மூர்த்த விக்ரமாபரணன்

32. செயங்கொண்ட சோழன்

இராஜராஜனின் மனைவியர் பெயர்கள்: பொன்னியின் செல்வனைப் படித்த யாவருக்கும் தெரிந்த இராஜராஜனின் மனைவி பெயர் வானதி, ஆனால் அவருக்கு மொத்தம் 11 மனைவிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள வானவன் மாதேவியைத்தான் வானதி என்று கல்கி எழுதியிருப்பார் என்பது கருத்து.

1. ஓலோக மாதேவி

2. அபிமான வல்லி

3. இலாட மாதேவி

4. சோழ மாதேவி

5. திரைலோக்ய மாதேவி

6. பிரிதிவி மாதேவி

7. பஞ்சவன் மாதேவி

8. மீனவன் மாதேவி

9. வானவன் மாதேவி (திரிபுவன மாதேவி)

10. வீர நாராயணி

11. வில்லவன் மாதேவி

தஞ்சாவூரில் இருந்த தெருப் பெயர்கள்: பரந்து விரிந்தது சோழநாடெனினும் தலைநகரத்திற்கு இருக்கும் சிறப்பே தனிதான், இதோ அந்த தலைநகரத்திலிருந்த தெருக்களின் பெயர்கள்.

1. இராசவித்யாதரப் பெருந்தெரு

2. வரசிகாமணிப் பெருந்தெரு

3. செயங்கொண்ட சோழப் பெருந்தெரு

4. நித்தவிநோதப் பெருந்தெரு

5. மும்முடி சோழப் பெருந்தெரு

6. வீரசிகாமணிப் பெருந்தெரு

7. வீரசோழப் பெருந்தெரு

8. ஆனை ஆட்கள் தெரு

9. ஆனைக் கடுவார் தெரு

10. காந்தர்வ தெரு

11. சாலியத் தெரு

12. பன்மையார் தெரு

13. மடைப்பள்ளி தெரு

உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு:

இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.

இராஜராஜன் காலத்து நாட்டுப் பிரிவு - மண்டலங்கள்

1. அதிராசராச மண்டலம் (சேலம் மாவட்ட்த் தென்பகுதி - கோவை - திருச்சி மாவட்டங்கள்)

2.இராசராசப் பாண்டி மண்டலம் (மதுரை - இராமநாதபுரம் - திருநெல்வேலி மாவட்டங்கள்)

4. செயங்கொண்ட சோழ மண்டலம் (தென்னார்க்காடு - செங்கற்பட்டு - வடவார்க்காடு - சித்னர் மாவட்டங்கள்)

5. சோழ மண்டலம் (தஞ்சாவூர் மாவட்டம் - திருச்சி மாவட்ட கிழக்குப் பகுதி)

6. நிகரிலி சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - பெல்லாரி மாவட்டம்)

7. மலை மண்டலம் (திருவாங்கூர் - கொச்சி உள்ளடங்கிய சேரநாட்டு மேற்கு கடற்கரைப் பகுதி)

8. மும்முடிச் சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - சேலம் மாவட்ட வடபகுதி)

9. வேங்கை மண்டலம் (கிருட்டின - கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட கீழைச் சாளுக்கிய நாடு)



நாட்டுப்பிரிவுகள்

ஒவ்வொரு மண்டலமும் பல வளநாடுகளாகவும், வளநாடுகள்

நாடுகளாகவும், நாடுகளுள் சில கூற்றங்களாகவும்

பிரிக்கப்பட்டிருந்தது. இப்பிரிவுகளின்கீழ் ஊர்கள் திகழ்ந்தன.

அவை சதுர்வேதிமங்கலம் என்றும் ஊர்கள் என்றும்

பெயர்பெற்றுத் திகழ்ந்தன. ஊர்களின் கீழ், பல சிற்றூர்களும்

இருந்தன. முதல் இராசராசசோழன் சோழமண்டலத்தை ஒன்பது

வளநாடுகளாகப் பிரித்திருந்தான். அவை



(1) இராசேந்திர சிங்கவளநாடு ,

(2) இராசராசாசிரய வளநாடு,

(3) கேரளாந்தக வளநாடு,

(4) பாண்டியகுலாசனி வளநாடு,

(5) நித்தவிநோத வளநாடு,

(6) உய்யக்கொண்டார் வளநாடு,

(7) சத்திரிய சிகாமணி வளநாடு,

(8) அருள்மொழிதேவ வளநாடு,

(9) இராசராச வளநாடு என்பனவாம்.



இவை இரண்டிரண்டு பேராறுகளுக்கு நடுவமைந்த நிலப்பரப்பாகும்.

இராசராசனுக்குப் பின் வந்த சோழ மன்னர்கள் இப்பெயர்களில் சிலவற்றை நீக்கிவிட்டுப் புதிய பெயர்களை இட்டனர்.



பேராட்சி முறையில் மன்னனுக்குத் துணை செய்த அலுவலர்கள்:

1. உத்திர மந்திரி

2. பெருந்தர அதிகாரிகள்

3. திருமந்திர ஓலை

4. திருமந்திர ஓலை நாயகம்

5. ஒப்பிட்டுப் புகுந்த கேழ்வி

6. வரியிலிடு

7. காடுவெட்டி

8. உடன் கூட்டத்து அதிகாரி

9. அனுக்கத் தொண்டன்

10. நடுவிருக்கை

11. விடையில் அதிகாரி

12. உள்வரி திணைக்களத்துக் கண்காணி

13. புரவரித் திணைக்களம்

14. புரவரி திணைக்களத்து நாயகம்

15. வரிப் பொத்தகம்

16. முகவெட்டி

17. வரிப்பொத்தகக் கணக்கு

18. வரியிலிடு புரவரி திணைக்களத்து நாயகம்

19. கடமை எழுதுவோன்

20. பட்டோலை

21. ஸ்ராகாரிய ஆராய்ச்சி

பெண் அதிகாரிகள்: அரசியின் ஆணையை நிரவேற்றிய பெண் அதிகாரி ”அதிகாரிச்சி” என்று அழைக்கப் பட்டாள்

சபைக்குரிய அலுவலர்கள்

பிணக்கறுப்பான் (அ) நடுநிலையாளன்: கிராமசபை நடைபெறும்போது உதவி செய்வதோடு அங்கு ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நடுநிலையாக இருந்து தீர்ப்பவனாவான்.

கணக்கன்: சபைக்குரிய கணக்கை எழுதுபவன் ஆவான். சபை விரும்பும்போது கணக்கை அவ்வப்போது காட்டுவதோடு ஆண்டு இறுதியில் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

கீழ்க்கணக்கன்: கணக்கனுக்கு உதவி செய்பவன்.

பாடி காப்பான்: கலகம், திருட்டு முதலான குற்றங்கள் ஊரில் நிகழாவண்ணம் காப்பவன்.

தண்டுவான்: கிராம மக்கள் அரசிற்கும், ஊர்ச்சபைக்கும் கொடுக்க வேண்டிய வரிகளை வவலிப்பவனாவான்.

அடிக்கீழ் நிற்பான்: ஊர்ச் சபையாருக்குக் குற்றவேல் புரிபவன்.





மக்களுக்கு இடப்பட்ட வரிகள்:



மக்களின் தேவைகள் மகேசனின் தேவைகள், அதை நிறைவேற்ற அரசுக்கு பொருள் வேண்டாமா? இதோ அரசின் வருவாய்க்காண வரிகள்.

1. அங்காடிப் பட்டம்

2. இடப்பாட்டம்

3. இலைக் கூலம்

4. இரவுவரி

5. இறை

6. ஈழம்

7. உல்கு

8. ஊரிடுவரி

9. எச்சோறு

10. ஏரிப்பாட்டம்

11. ஓடக்கூலி

12. கண்ணாலக்காணம்

13. காவேரிக்கரை வினியோகம்

14. குசக்காணம்

15. குடிமை

16. சபாவினியோகம்

17. சித்தாயம்

18. சில்லிறை

19. சில்வரி

20. செக்கிறை

21. தட்டார்ப் பாட்டம்

22. தரகு

23. தறியிறை

24. நாடுகாவல்

25. நீர்க்கூலி

26. பாடிகாவல்

27. பூட்சி

28. போர்வரி

29. மரமஞ்சாடி

30. மரவிறை

31. மனை இறை

32. மீன் பாட்டம்

33. வண்ணாரப்பாறை

சோழர்கால கப்பல்கள்:

கடல் கடந்து வாணிகத்திலும், ஆதிக்கத்திலும் கோலோச்சிய சோழர்கள் நீர்ப்போக்குவரத்திலும் சிறந்து விளங்கினர். இதோ கி.பி. 9 - 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம் என்னும் நூல் குறிப்பிடும் கப்பலின் பெயர்கள்.

1. வங்கம்

2. பாடை

3. தோணி

4. யானம்

5. தங்கு

6. மதலை

7. திமில்

8. பாறு

9. அம்பி

10. ப∑ரி

11. சதா

12. பாரதி

13. நௌ

14. போதன்

15. தொள்ளை

16. நாவாய்

உலகளந்தான் கோல்

சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராசன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறைச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது. நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது.

எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு அசாதாரண பணி, இதனை மிகவும் சீரிய முறையில் சாதித்த சோழராஜனின் மகுடத்தில் இந்த அரிய பணி ஒரு வைரம்.

உலகளந்தான் கோல் பற்றிய சில விவரங்கள்:

24 விரல் கொண்ட முழம் - கிஷ்கு

25 விரல் கொண்ட முழம் - பிரஜாப மத்தியம்

26 விரல் கொண்ட முழம் - தனுர் முஷ்டி

27 விரல் கொண்ட முழம் - தனுர் கிரஹம்

28 விரல் கொண்ட முழம் - பிராச்யம்

29 விரல் கொண்ட முழம் - வைதேகம்

30 விரல் கொண்ட முழம் - வைபுல்யம்

31 விரல் கொண்ட முழம் - பிரகீர்ணம்

33” ஆங்கில அளவிற்கு சமமானது கிஷ்கு .

சோழர் இலச்சினை



சங்க காலத்துச் சோழர்களும், பிற்காலச்சோழர்களும் புலி

உருவத்தையே தங்கள் இலச்சினையாகக் கொண்டனர். சேர,

பாண்டிய நாடுகளின் மலோதிக்கத்தைக் கொண்டதால்

சேரர்களுக்குரிய வில்லையும், பாண்டியர்களுக்குரிய இரு மீன்

உருவங்களையும் தங்கள் இலச்சினையிலேயே இடம்பெறுமாறு

செய்தனர். அட்டமங்கலங்கள் எனும் ஸ்வஸ்திகம், கண்ணாடி,

மத்தளம் போன்ற பொருள்களையும் அவ்விலச்சினையிலேயே

இடம்பெறச் செய்தனர். சோழர்களின் கொடி புலிக்கொடியே

ஆகும்.