பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் ரயில் பாதை என்பது பட்டுக்கோட்டை மற்றும் அதை சுற்றி 50 கீ.மீ பரப்பளவில் அமைத்துள்ள ஊர்களைச் சேர்ந்த மக்களின் 60 ஆண்டுக்கால கனவு! பட்டுக்கோட்டை மண், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி உட்பட எத்தனையோ பிரபலங்களை,உலகிற்கு அளித்திருந்தாலும் கூட , இப்பகுதி மக்கள்ின் நியாமான கனவு இன்னாள் வரை கனவகாவே உள்ளது. பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் ரயில் பாதை என்பது இன்று ,நேற்று ஏற்பட்டத்தல்ல, 1946 லேயே தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டம் தீட்டப்பட்டு, ட்ரஃபிக் கம் இஞ்சினீரிங் சர்வே ரிபோர்ட் ரயில்வே போர்ட்க்கு 1949 செப்டம்பரில் அனுப்பப்பட்டது. ஆனால் அத்திட்டம் லாபகரமாக இல்லை என்ற காரணத்தைக் கூறி நிராகரிகப்பட்டது. அது மட்டும்மல்ல ரயில்வே போர்டின் 13.10.1949 ந் தேதிய கடிதத்தின் மூலம் கிடப்பில் போடப்பட்டது.மீண்டும் 1997ம் ஆண்டு வாக்கில் பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் அகல ரயில் பாதைக்காக ஒரு ட்ரஃபிக் கம் இஞ்சினீரிங் சர்வே நடத்தப்பட்டு, அச்சர்வே மீதான அறிக்கை 09.03.2000 ந் தேதியில் ரயில்வே போர்டுக்கு அனுப்பட்டது. ஆனால் ரயில்வே போர்ட் அதே பழைய பல்லவியையே அதாவது லாபகரமாக இல்லை என்ற பல்லவியையே மீண்டும் பாடி அத்திட்டதை கைவிட்டது. இடையில் 2007-2008 ம் வருட மத்திய பட்ஜெட்டில் மன்னார்குடி வழியாக நீடாமங்கலம்- பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது ஆனால் அத்திட்டதிற்கும் பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் அகல ரயில் பாதை திட்டதிற்கு ஏற்பட்ட கதியே ஏற்பட்டது. ஆதாவது லாபகரமாக இல்லை என்று கைவிடப்பட்டது. சாமி வரம் கொடுத்தும் பூசாரி குறுக்கே புகுந்து தடுத்த கதையாக மத்திய அரசால் பட்ஜட்டில் அறிவிக்கப்பட்டும், ரயில்வே போர்டில் உள்ள அதிகாரிகளால் லாபகரமாக இல்லை என்று கைவிடப்பட்டது. அவ்வதிகாரிகளை பார்த்து ஒன்று கேட்கிறேன், லாபம் பார்த்து செயல்பட ரயில்வே தனியார் நிறுவனமா?இல்லை பொதுத்துறை நிறுவனமா? லாபமே எங்களுக்கு முக்கியம்; மக்கள் சேவை இரண்டாம் பட்சம் என்று நீங்கள் கருதுவீர்களானால் பேசாமல் ரயில்வேத்துறையைத் தனியார்மயமாக ஆக்கிவிட்டு போக வேண்டியதுதானே? இந்நிலையில் இப்பகுதியை தொட்டு ஒடிக் கொண்டிருந்த ரயில்கள் காரைக்குடி- மயிலாடுதுறை பாசஞ்சர் மற்றும் கம்பன் எக்ஸ்பிரஸ். அந்த ரயில்களையும்அகல ரயில் பாதை ஆக்குகின்றேன் என்று இப்போது கம்பன் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டுவிட்டது.காரைக்குடி- மயிலாடுதுறை பாசஞ்சரும் திருவாரூருடன் நிறுத்தப்பட்டுவிட்டது. திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை வரை அகல ரயில் பாதை பணிகள் நிறைவுரும் கட்டத்தில் இருக்கின்றன, ஆனால் திருவாரூரிலிருந்து காரைக்குடி வரை அகல ரயில் பாதை பணிகள் தொடக்கப்படவேயில்லை; அதற்கான எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் ரயிவேயால் எடுக்கபடவில்லை. மேலும் தென்னக ரயில்வேயின் முதன்மை நிர்வாக அலுவலரின் 25/05/2010 ந்தேதிய கடித்ததின் படி, திருவாரூரிலிருந்து காரைக்குடி வரை அகல ரயில் பாதைக்கு இன்னும் திருத்திய திட்ட மதிப்பீடே செய்யப்படவில்லை என தெரிய வருகின்றது.இதன் மூலம் திருவாரூரிலிருந்து காரைக்குடி வரையிலான அகல ரயில் பாதை திட்டமும் கனவாகவே போய்விடும் அபாயமும் உள்ளதுசரி இவர்கள் சொல்வது போல் பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் அகல ரயில் பாதை திட்டம் லாபகரமாக இல்லை என்பது உண்மையா? இல்லை பொய் ; ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பது, பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் இடையே ஓடும் பேருந்துக்களில் நிரம்பி வழியும் கூட்டத்தை பர்த்தாலே தெரியும். பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் இடையே ஓடும் பேருந்துக்களில் ஒரு நாள் கலெக்ஷன் மட்டும் 2.5 லட்சத்தை தாண்டும்,மாததிற்கு,75 லட்சம், வருடத்திற்கு 9 கோடி. இதை தவிர பட்டுக்கோட்டை , பேராவூரணி , மதுக்கூர், அதிராம்பட்டினம், முத்துபேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி மற்றும் அரசு பஸ்களின் எண்ணிக்கை 35 மறுமார்க்கத்திலிருந்து 35.இவ்வற்றின் வருட வருமானம் 60 கோடி. இவ்வளவு லாபம் கொழிக்க கூடிய வழிதடத்தை லாபகரமானது இல்லை என்று முழு பூசனிக்காயை சோறே இல்லாமல் மறைக்கப் பார்க்கீறீர்களே,ஐயா இது நியாமா ?பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் அகல ரயில் பாதை திட்டம் என்பது இப்பகுதியின் முன்னேற்றதிற்கும் வளர்ச்சிக்குமான ஒரு திறவுகோல்.இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இப்பகுதி அசுர வளர்ச்சி அடையுமென்றால் அது மிகையில்லை. இத்திட்டத்தினால் இப்பகுதி மக்கள் அடையக்கூடிய நன்மைகள்தான் எத்தனை!முதலாவதாக இப்பகுதி மக்கள் மாவட்ட தலைநகரான தஞ்சாவூருக்கும் அருகில் உள்ள மிகப் பெரிய நகரான திருச்சிக்கும் சென்று வருவது எளிதாகும். இதனால் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும், வைத்தியதிற்கு செல்லும் நோயாளிகளுக்கும் மிக உதவியாக இருக்கும்.இரண்டாவதாக ! தற்போது இப்பகுதி மக்கள் சென்னை செல்ல வேண்டுமேன்றால் 12 மணி நேரம் பிடிக்கிறது. அதுவும் அனைக்கரை பாலம் பழுதான பிறகு பேருந்துக்கள் அனைத்தும் மயிலாடுதுறையை சுற்றி போகின்றன. கடவுளே! 12 மணி இடுப்பொடிய உட்கார்த்து பயணம் செய்வது எவ்வளவு கொடுமை! இல்லை வசதியாக ரயிலில் போய்விடலாம் என்றால், தஞ்சாவூர் சென்றுதான் ரயிலேற வேண்டும் .அதற்கும் டிக்கேட் கிடைப்பது பெரும்பாடு. ஆனால் பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் அகல ரயில் பாதை திட்டம் போடப்பட்டு அது அரியலூர் வரை நீட்டிக்கப்பட்டால், இப்பகுதி மக்கள் மாநில தலைநகரான சென்னைக்கு ஆறு மணி நேரத்தில் செல்ல முடியும்!மூன்றாவதாக, பட்டுக்கோட்டை வழியாக இராமேஸ்வரத்திலிருந்து தஞ்சைக்கு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டால், இராமேஸ்வரத்திற்க்கு யாத்திரை வரும் வடநாட்டு பயணிகள் தஞ்சை பெருவுடையார் கோவிலையும் மேலும் புதுகை மற்றும்டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆன்மீக ஸ்தலங்களையும் தரிசிப்பது எளிதாகும். இதன் மூலம் இப்பகுதியில் சுற்றூலாத்துறை வளர்ச்சி பெறும். சுற்றூலாத்துறை வளர்ச்சியடைந்தால் வர்த்தகம் பெருகும்; வர்த்தகம் பெருகினால் ;இப்பகுதி வளம் பெறும் .நான்காவதாக, இத்திட்டத்தினால் இப்பகுதி மக்களுக்கு மட்டும் நன்மையில்லை; ரயில்வேத்துறைக்கும் நன்மையுண்டு. எப்படியென்றால் சென்னையிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு, இயக்கபடும் ரயில்களான இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ,சேது எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகியவை அரியலூர், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக இயக்கப்பட்டால்,பயண நேரத்தில் சுமார் 3 மணி நேரமும், பயண தூரத்தில் 100 கீமீ தூரமும் குறையும். இதனால் ரயில்வேக்கு எரிப்பொருளும் மிச்சமாகும்.மேலும் பிற்காலத்தில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் பல அயல் நாட்டுக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் எரிப்பொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்படும் அப்போது சென்னையில் இருக்கும் பெட்ரோலிய கிடங்கிலிருந்து , பெட்ரோலிய பொருட்களை,தூத்துக்குடி துறைமுகத்திற்கு பட்டுக்கோட்டை வழியாக வேகன்கள் மூலம் கொண்டு சென்றால் அது ரயில்வேத்துறைக்கு லாபத்தை அள்ளித்தரும். மேலும் அதே வேகன்கள் மூலமே இப்பகுதியில் உற்பத்தியாகும் தேங்காய், இறால், உப்பு ஆகியவற்றை தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லாம்,இதனால் இப்பகுதியின் விவசாயமும் , வர்த்தகமும் செழித்தொங்கும்! பட்டுக்கோட்டை நகரமும் ஒரு வணிக கேந்திரமாக உருவெடுக்கும்! அத்துடன் அதிராம்பட்டினம், முத்துபேட்டை மல்லிப்பட்டினம், கோடியக்கரை ஆகிய இடங்களில் சிறு துறைமுகங்கள் ஏற்படும் அதனால் ஏற்படும் தொழில் வளர்ச்சிக்கு ரயில் பாதை அவசியம்.இப்படி, பட்டுக்கோட்டை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளின் முன்னேற்றத்திற்கு இன்றியாமையாத இந்த ரயில் பாதை திட்டதிற்காக அகில இந்திய மனித உரிமை கழகம் கடந்த 2007 ம் ஆண்டு முதலே போராடி வருகின்றது. மத்திய ரயில்வேத்துறை அமைச்சருக்கும், இத்தொகுதியின் பாரளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய நிதி துறை இனை அமைச்சருக்கும் , பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் அகல ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றக் கோரி பல கோரிக்கை மனுக்களையும் அனுப்பியது. இது தவிரவும் தகவல் அறியும் உரிமை சட்டதின் கீழ்,பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் அகல ரயில் பாதை திட்டம் எந்த நிலைமையில் இருக்கின்றது என்ற தகவலை கேட்டு தென்னக ரயில்வேயின் பொது தகவல் அதிகாரிக்கு மனு செய்தது. அம்மனுவிற்கு தான் பொது தகவல் அதிகாரி பதில் அனுப்பினார், அத்திட்டம் லாபகரமாக இல்லை என்பதால் கைவிடப்பட்டது என்று! அப்பதிலால் திருப்தி அடையாத அகில இந்திய மனித உரிமை கழகம், தகவல் அறியும் உரிமை சட்டதின் கீழ் அப்பதில் மீது மேல்முறையீடு செய்தது.அம்மேல்முறையீட்டில், அத்திட்டம் லாபகரமானது தான் என எடுத்துக்கூறி ரயில்வே போர்டின் முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்புகள் உண்டா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தது. அம்மேல்முறையீட்டிற்கு பதிலளித்த மேல்முறையீட்டு அதிகாரி, பின்னாளில் இப்பகுதியில் தொழில் மறுமலர்ச்சி ஏற்பட்டால், பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் அகல ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றுவதைக் குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ரயில் வந்தால் தான் இப்பகுதியில் தொழில் மறுமலர்ச்சி ஏற்படும் என்கிறோம் நாம்; இப்பகுதியில் தொழில் மறுமலர்ச்சி ஏற்பட்டால் தான் ரயில் வரும் என்கிறார்கள் அதிகாரிகள். ஒரு பகுதியில் தொழில் சிறக்க வேண்டுமேன்றால், அப்பகுதியின் போக்குவரத்து வசதி மேன்பட வேண்டும் என்ற பால பாடம் கூட தெரியாதவர்கள், அதிகார பீடங்களை அலங்காரிப்பதன் விளைவைத்தான் நாம் இப்போது அனுபவித்து கொண்டிருக்கின்றோம்!இப்பகுதி மக்களுக்கு ஏராள நன்மைகளைத் தரக்கூடிய திட்டதை, லாபம் கொழிக்க கூடிய திட்டத்தை லாபகரமாக இல்லை என்று, கைவிட்டால், அது எவ்வளவு பெரிய கயமைத்தனம்!அதை எதிர்த்து நாம் போராட வேண்டாமா? ஆனால் துரத்திர்ஷ்டவசமாக, அகில இந்திய மனித உரிமை கழகத்தை போன்ற ஒரு சில அமைப்புகளை தவிர, வேறு யாரும் இத்தன்னை காலமாக இவ்விஷயத்தில் அவ்வளவாக சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது ஒரு நம்பிகை புள்ளி தென்படுகிறது.அகில இந்திய மனித உரிமை கழகமும் பட்டுக்கோட்டை , பேராவூரணி , அதிராம்பட்டினம், முத்துபேட்டை, திருத்துறைப்பூண்டி, மதுக்கூர், பாப்பாநாடு, ஊரணிபுரம் ஆகிய பகுதிகளிலின் வர்த்தகர் சங்கங்களும் இனைத்து ஒரு மாபெரும் மக்கள் போரட்டத்தை முன்னேடுத்து செல்ல போகின்றார்கள். கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள்திறக்கப்படும் என்றார் இயேசுகிறிஸ்து. எனவே இதுநாள் வரை மெத்தனமாக இருந்தது போதும். இனியேனும் விழித்தெழுவோம்! நம் பகுதி மக்களின் நியாமான கோரிக்கையை, அக்கோரிக்கை நிறைவேறத்தாதல் நம்பகுதி மக்கள் படும் வேதனையையும், வலியையும் இப்போராட்டத்தின் மூலம் மத்திய மாநில அரசுகளின் காதுகளில் உரத்து சொல்வோம் வாருங்கள்!
