Powered By Blogger

25 ஜன., 2010

திரையில் ஒரு குப்பை

ஆயிரத்தில் ஒருவன் பற்றி நிறைய விமர்சனகள் வந்துவிட்டது .ஆனால் இந்த இடுகை விமர்சனம் அல்ல .என் ஆதங்கம் . இப்படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை பற்றிய இடுகை அல்ல இது . இப்படம் எவ்வளவு மலிவான வரலாற்று திரிபு என்பதை பற்றிய இடுகை இது .
இப்படம் பற்றி கலவையான விமர்சனகள் வந்திருந்தாலும் , படம் எப்படி இருக்கிறது என பார்க்கச் சென்றேன் .ஆனால் கோபத்தில் ரத்த கொதிப்பு வந்தது தான் மிச்சம் . சோழ மன்னர்களை எவ்வளவு கேவலப் படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி இருக்கிறார்கள் . படம் ஆரம்பிப்பதற்கு முன் , இந்த படத்தின் கதை சோழர் பாண்டியர் வரலாற்றோடு தொடர்ப்பு இல்லை என போட்டுவிட்டால் , எப்படி வேண்டுமானாலும் அந்த தமிழ் மாமன்னர்களை கேவலப்படுத்தலாமா ? கற்பனை கதை என்றால் பிறகு ஏன் சோழர்களின் பெயரையும் , புலிச் சின்னத்தையும் பயன் படுத்தினீர்கள் ? சோழ மன்னர்களை வழிபறிக் கொள்ளையர் போலவும் , சோழத் தேச மக்களை பஞ்ச பரதேசிகளாகவும் , காட்டுமிராண்டிகளாகவும் சித்தரித்துள்ளர்கள் . கி.மு 1000 லேயே நாகரிக வாழ்கை மேற்கொண்டு , கடல் வாணிபம் செய்தவர்கள் தமிழர்கள் . அப்படிப்பட்ட உயர்வுடைய இனத்தின் மன்னர்களை இப்படியா சித்தரிப்பது ?
தஞ்சை பெரியகோவில் , ஆயிரம் ஆண்டுகள் தாண்டி நிற்கும் ஒரு கலை அற்புதம் . அது வெறும் சமயச் சின்னம் மட்டுமல்ல , ஒரு பண்பட்ட இனக்குழுவின் , நாகரிக, கலாச்சார வாழ்வின் அடையாளம் . ராஜா ராஜா சோழரின் ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி . அப்படிப்பட்ட மாமன்னரின் வழிவந்தவர்களை அவரை விட நாகரிகத்தின் உச்சம் தொட்டவர்காளகத்தனேக் காட்ட வேண்டும் .அதை விடுத்து , அவர்களை காட்டுமிராண்டிகளாக காட்டியிருப்பது நியாமா ? பொன்னியின் செல்வன் கூட கற்பனை கலந்த வரலாற்று புதினம்தான் , ஆனால் அதில் தமிழ் மன்னர்களை கேவலப்படுத்தவில்லையே . மாறாக கல்கி , அவர்களை உயர்த்திதானே காட்டி இருந்தார் . தஞ்சை பெரியக் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் இப்படி ஒரு படம் வந்திருக்க வேண்டாம் .
சோழ மன்னர்களை மட்டும் அல்ல பாண்டிய மன்னர்க் குலத்தில் வந்தவர்களையும் ஈவு இரக்கம் அற்றவர்களாக காட்டி இருக்கின்றனர் . உண்மையில் தமிழ் மன்னர்கள் இரக்கமும் ,கனிவும், பெருந்தன்மையும் கொண்டவர்கள் .
இதை விட கொடுமை இந்த படத்தை தமிழர்கள் சகித்துக் கொண்டு இருப்பது . தமிழ்க் கலாச்சாரக் காவலர்கள் எங்கே போனார்கள் ? முன்றரை ஆண்டுகளாக கஷ்டப்பட்டு , 35 கோடி செலவில் எடுக்க பட்டதால் , இந்த வரலாற்று திரிபை சகித்துக் கொள்ள முடியாது .உண்மையில் இக்கதையை செல்வராகவன் யோசித்து எடுக்கவில்லை . டைம் லைன் என்கிற ஆங்கில படத்தின் தழுவல் தான் . தமிழுக்காக அரும்பாடுபடும் தமிழக முதல்வர் இப்படத்தை தடை செய்ய வேண்டும்.

15 ஜன., 2010

நிஸூம்பஸுதநி

(இது நிஸும்பஸூதநி இல்லை , பட்டீஸ்வரம் துர்க்கை . )
நிஸும்பஸூதநி காளியின் மற்றொரு பெயர் . இவ்வன்னை சோழர்குல வரலாற்றோடு தொடர்ப்பு உடையவள் . பிற்காலச் சோழ அரசை ஸ்தாபித்த விஜயாலயச் சோழன் முத்தரையை வென்று தஞ்சைக் கோட்டையை கைபற்றிய போது கோட்டையின் எட்டு திக்குகளிலும் எட்டு காளியரை பிரதிஷ்டை செய்தார் . அவ்வெட்டுக் காளியருள் இவ்வன்னையே முதன்மையானவள் .

காலவோட்டத்தில் இக்கோவில் சிதிலம் அடைத்துவிட , மராட்டிய மன்னர்களால் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இக்கோவில் தஞ்சை கீழவாசலில் உள்ள குயவர் தெருவில் உள்ளது. அன்னை எட்டுக் கரங்களோடு கோரை பற்கள் கொண்டுக் காட்சித் தருகிறாள் . முகம் கோபத்தில் அக்ரஷமாகக் காட்சித் தருகிறது. ஆனாலும் ஒருவித அமைதியும், கனிவும் பொங்குகிறது . சிலர் இவ்வன்னையின் உருவம் சோழக் கால அமைப்பு போல் இல்லை என சொல்கிறார்கள் . இவ்வன்னை சோழர்க் காலதியதோ இல்லையோ , ஆனால் அங்கே இருந்தபோது அமைதியும் , நிம்மதியும் ஏற்பட்டது . தஞ்சை பக்கம் சுற்றுலா செல்பவர்கள் மறக்காமல் தரிசிக்க வேண்டிய கோவில் இது .