(இது நிஸும்பஸூதநி இல்லை , பட்டீஸ்வரம் துர்க்கை . )நிஸும்பஸூதநி காளியின் மற்றொரு பெயர் . இவ்வன்னை சோழர்குல வரலாற்றோடு தொடர்ப்பு உடையவள் . பிற்காலச் சோழ அரசை ஸ்தாபித்த விஜயாலயச் சோழன் முத்தரையை வென்று தஞ்சைக் கோட்டையை கைபற்றிய போது கோட்டையின் எட்டு திக்குகளிலும் எட்டு காளியரை பிரதிஷ்டை செய்தார் . அவ்வெட்டுக் காளியருள் இவ்வன்னையே முதன்மையானவள் .
காலவோட்டத்தில் இக்கோவில் சிதிலம் அடைத்துவிட , மராட்டிய மன்னர்களால் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இக்கோவில் தஞ்சை கீழவாசலில் உள்ள குயவர் தெருவில் உள்ளது. அன்னை எட்டுக் கரங்களோடு கோரை பற்கள் கொண்டுக் காட்சித் தருகிறாள் . முகம் கோபத்தில் அக்ரஷமாகக் காட்சித் தருகிறது. ஆனாலும் ஒருவித அமைதியும், கனிவும் பொங்குகிறது . சிலர் இவ்வன்னையின் உருவம் சோழக் கால அமைப்பு போல் இல்லை என சொல்கிறார்கள் . இவ்வன்னை சோழர்க் காலதியதோ இல்லையோ , ஆனால் அங்கே இருந்தபோது அமைதியும் , நிம்மதியும் ஏற்பட்டது . தஞ்சை பக்கம் சுற்றுலா செல்பவர்கள் மறக்காமல் தரிசிக்க வேண்டிய கோவில் இது .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக